கொழும்பு மாநகர சபையினால் பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதற்கமைய, எதிர்வரும் 29, 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் கரையோர ரயில் பாதையில் செல்லும் ரயில்கள் கொழும்பு கோட்டை மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு இடையில் ஒற்றைப் பாதையில் பயணிக்கவுள்ளது.
இதன்படி குறித்த நாட்களில் பல ரயில் பயணங்களை ரத்து செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சில ரயில்கள் தாமதமாக இயக்கப்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.