இலங்கை சவாலான பொருளாதார நிலையொன்றை முகங்கொடுத்துள்ள இக்காலத்தில், வேலைவாய்ப்பு மற்றும் சேவைகள் வழங்கல் மற்றும் பெறுதல் வழிமுறைகளில் குறிப்பிடத்தக்க சக்தியாக, ‘Worky’ என்ற பெயரில் ஒரு புதிய தளம் மார்ச் 20, 2024 அன்று ஆரம்பமாகியுள்ளது. வேலை தேடுவோர், பகுதிநேர தொழிலாளர்கள், மாணவர்கள், இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ‘Worky’ இலங்கையில் மக்கள் வேலை தேடும் மற்றும் சேவைகளுக்கு அமர்த்தும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்த தயாராக உள்ளது.
‘Worky’ என்பது ஒரு இருப்பிடத்தினை அடிப்படையாக கொண்ட சேவை தளமாகும், இந்த அப்பில் வேலை தேடுபவர்கள், பகுதி நேர பணியாளர்கள் உட்பட பலதரப்பட்ட துறைசார்ந்தோர்கள் இலவசமாக பதிவு செய்யலாம். இந்த புதுமையான பயன்பாடு, சேவை தேடுபவர்களுக்கு உள்நுழையவும், அருகிலுள்ள பணியாளரைக் கண்டறியவும் உதவுகிறது, இது பரந்த அளவிலான சேவைகளுக்கு உடனடி முன்பதிவுகளை எளிதாக்குகிறது. நெசவுத் தொழிலாளர் மற்றும் தச்சர் போன்ற பாரம்பரிய தொழில்கள் தொடக்கம் செல்லப்பிராணிகளை வளர்ப்பது போன்ற நவீனகால செயல்பாடுகள் வரை, ‘Worky’ அப்பின் ஊடாக தமக்குரிய பணிகளை நிறைவேற்ற தேவையான தொழிலாளர்களை இனங்கண்டு அணுகலாம். குடும்பங்களின் பல்வேறு தேவைகளை நேரடியாக நிவர்த்தி செய்து கொள்ளவும் பல்வேறு வகையான வேலை வாய்ப்புகளை தொழில் தேடுவோருக்கும் இந்த அப் வழங்குகிறது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார பின்னடைவின் காரணமாக தனிநபர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடுகிறார்கள், ‘Worky’ அப் அதற்கான தீர்வுகளை வழங்கும் நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது. பகுதி நேர வேலை கலாச்சாரத்தை ஊக்குவிப்பதன் மூலம், இந்த தளம் வேலை தேடுவதில் உதவுவது மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உற்பத்தித்திறனை கணிசமாக அதிகரிக்கிறது. ஒரு காலத்தில் பல இலங்கையர்களுக்கு கடினமான பணியாக இருந்த வீட்டுத் தேவைகளுக்காக திறமையான தொழிலாளர்களை அணுகும் தேவை, இப்போது ‘றுழசமல’ செயலி மூலம் சிரமமின்றி நிர்வகிக்கப்படுகிறது.
இதன் பயனர் நட்பு அணுகுமுறையானது ‘Worky’ யை வேறுபடுத்திக்காட்டும் சிரப்பம்சமாகும். வேலை தேடுபவர்கள் மற்றும் தொழிலாளர்கள் எந்தவிதமான இடைநிலைச் செலவுகளும் இல்லாமல் நேரடியாக தொழில்வழங்குனருடன் கட்டணங்களைத் தீர்க்க முடியும், இது ‘Worky’ செயலியின் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதிப்படுத்துகிறது.
தனது அறிமுகத்தினை தொடர்ந்து ‘Worky’ இலங்கையின் அனைத்து சமூக மட்டங்களிலும் உற்பத்தித்திறன் வளர்ப்பதற்கான பிரதான பங்காளியாக மாறிவருவர்டன், விரைவாக வீட்டுப் பெயராக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது அறிமுகத்தினை தொடர்ந்து சில வாரங்களில் சமூகத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களை ஈர்க்கும் என்று எதிர்வுகூறப்படுகின்றது. இவ்வாறான நவீன மாற்றத்திற்கான் தேவை மற்றும் சாத்தியமான தாக்கத்திற்கு ஒரு சான்றே இதுவாகும்.
வேலை வாய்ப்புகள் அல்லது குறிப்பிட்ட பணிகளுக்கான சரியான திறமைசாலிகளை அயராது தேடும் நாட்கள் போய்விட்டன. ‘Worky’ மூலம், இலங்கையின் வேலை தேடும் மற்றும் வழங்கும் கலாச்சாரத்தில் ஒரு புதிய சகாப்தம் உதயமாகிறது, ‘Worky’ இல் பதிவு செய்வது முற்றிலும் இலவசமானதாகும். இது இலங்கை மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், தொழில் சந்தையின் வளர்ந்து வரும் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கும் இணையற்ற வாய்ப்பை வழங்குகிறது.