Friday, June 26, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவீடொன்றிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்பு

வீடொன்றிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்பு

கடுவெல பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடுவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்தலாவல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று (27) காலை பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கொத்தலாவல – கடுவெல பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

குறித்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும், ​​வீட்டிற்குள் தலையில் காயத்துடன் தரையில் கிடந்த நிலையில் அவர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லேரியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கடுவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles