நீர்கொழும்பு பகுதியிலுள்ள ஸ்பாக்களில் இருந்து எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான இரு பெண்கள் அடையாளம் காணப்பட்டனர்.
குறித்த பெண்கள் பணியாற்றிய ஸ்பாக்கள் தொடர்பில் தகவல் கேட்டு பொலிஸாருக்கு பல தொலைபேசி அழைப்புகள் வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவர்களின் சேவைகளைப் பெற்ற வாடிக்கையாளர்களை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்ப பொலிஸ் மற்றும் சுகாதாரத் துறையினர் கூட்டு விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அதன்படி, குறித்த ஸ்பாக்களில் சேவைகளைப் பெற வந்தவர்களை அடையாளம் காணும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
நீர்கொழும்பில் உள்ள ஸ்பாவொன்றுக்கு தொடர்ந்து செல்லும் நபர் ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஸ்பாக்களை தேடி சோதனை நடத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்பிறகு விசாரணையை தொடங்கிய பொலிஸார், ஸ்பா என்ற போர்வையில் 53 விபச்சார விடுதிகளில் பணியாற்றிய 137 பெண்களை கைது செய்தனர்.