இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தக இதர சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
களஞ்சியசாலைகளில் போதியளவு முட்டைகள் இருந்தமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
நாட்டின் களஞ்சியசாலைகளில் தற்போது 4-5 மில்லியன் முட்டைகள் இருப்பதாகவும், சதொச வர்த்தக நிலையங்களுக்கு நாளாந்தம் 500,000 முட்டைகள் வெளியிடப்படுவதாகவும் அவர் கூறினார்.