நியூமோனியா காய்ச்சலில் உயிரிழந்த ஒருவரின் நுரையீரலில் இருந்து பல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பலாங்கொடை வலேபொட பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு நியூமோனியாவில் உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை நேற்று பலாங்கொடை வைத்தியசாலையில் நீதிமன்றத்துக்கான வைத்திய அதிகாரிமுன்னிலையில் அவசர மரண பரிசோதகரினால் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது உயிரிழந்தவரின் நுரையீரலில் இருந்து பல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
சில வருடங்களுக்கு முன்பு குறித்த பல் விழுந்து காணாமல் போயிருந்த நிலையில் அவரது பல் நுரையீரலில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.