நீர்கொழும்பு பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதிகளில் பணியாற்றிய 2 பெண்களுக்கு எய்ட்ஸ் தொற்றிருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
இந்தச் சோதனையின் போது 53 மசாஜ் நிலையங்கள் மூடப்பட்டு அதில் பணிபுரிந்த 137 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.