நிறுவன ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிறுவனத்தின் தலைவர் என்ற ரீதியில் தான் பொறுப்பு எனவும், ஆனால் மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை எனவும் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து ஆராயும் கலந்துரையாடல் ஒன்று நேற்று (26) இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றது.
ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தனக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் மறுபரிசீலனை காரணமாக வெளியேற மாட்டேன் என அவர் குறிப்பிட்டார்.
பதவியை இராஜினாமா செய்தால் நாட்டுக்கு எதுவும் செய்ய முடியாத பட்சத்தில் தான் பதவி விலகுவேன் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.