வெலிகந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹிந்தகம பிரதேசத்தில் நேற்று (26) மாலை மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அசேலபுர – வெலிகந்த பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தண்ணீரை தெளிப்பான் ட்ராக்டரை கழுவச் சென்றபோது, குறித்த இயந்திரத்தினூடாக வந்த மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் வெலிகந்த வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.