கெஹெலிய ரம்புக்வெல்ல தன்னிச்சையாக கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது மகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (27) முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டை சமர்ப்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
தனது தந்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தன்னிச்சையாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறினார்.