Tuesday, March 18, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஐயோ சாமி பாடலுக்கு எடிசன் விருது

ஐயோ சாமி பாடலுக்கு எடிசன் விருது

சென்னையில் நேற்று நடைபெற்ற 16வது எடிசன் விருது விழாவில் ஐயோ சாமி பாடலுக்கு, இந்த ஆண்டின் சிறந்த உணர்வுப் பாடல் – 2023 விருது கிடைத்துள்ளது.

குறித்த விருதுடன் பாடகியான வின்டி குணதிலக்க நேற்றிரவு (26) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

சர்வதேச திரைப்படங்கள் மற்றும் பாடல்களை மதிப்பிடுவதற்காக இந்த விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது.

இந்த விருது வழங்கும் விழா கடந்த 24 ஆம் திகதி சென்னையில் நடைபெற்றது.

இவ்விருது நிகழ்வில் இப்பாடலை எழுதிய அஸ்மின் மற்றும் இப்பாடலுக்கு இசையமைத்த சனுக விக்கிரமசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இவர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-218 இல் சென்னையில் இருந்து நேற்று இரவு 06.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

மேலும், விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக வின்டி குணதிலக்கவின் பெற்றோர்களான ரூகாந்த குணதிலக்க, சந்திரலேகா பெரேரா மற்றும் சனுக விக்ரமசிங்கவின் தந்தை சங்கீத் விக்ரமசிங்க உட்பட பலர் சென்றிருந்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles