07 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிறுமியின் உறவினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பல்லம பொலிஸார் தெரிவித்தனர்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியின் 77 வயதான பாட்டன் மற்றும் 19 வயதான அவரது உறவினர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டில் பெற்றோர் இல்லாத போது குறித்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக செய்யப்பட்ட முறைப்பாடின் பிரகாரம் இருவரும் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் ஆனமடுவ , அதிகம, பரப்பந்தோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இருவரும் தன்னை 05 வயது முதல் அவ்வப்போது துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இருவரும் ஆனமடுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.