ஏ9 – வீதி யாழ்ப்பாணம் மீசாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் அதிசொகுசு பேருந்துடன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த சின்னராசா சுதன்ராஜ் (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய பேருந்து தப்பிச் சென்ற நிலையில் பொலிஸாரிடம் சிக்கியது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி குறித்த பேருந்து பயணித்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதுடன், கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.