குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 20 கிலோ அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறைந்த வருமானம் பெறும் 28 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதன்படி ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.