ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பிற்காக பொலிஸாரால் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை ஆகிய தினங்களில் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
27, 28 ஆகிய நாட்களில் குறித்த பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தேவாலயங்களுக்கு சென்று அங்குள்ள சமயத்தலைவர்களை சந்தித்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
அத்துடன், அந்த தேவாலயங்களில் உள்ள நிர்வாகத்தினருடன் கலந்தாலோசித்து அங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் காணப்பட்டால் அவர்களுடனும் கலந்தாலோசித்து இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.