இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதனடிப்படையில் துடுப்பாட்டத்தில் ஈடுப்பட்ட இலங்கை அணி முதல் இன்னிங்ஸ் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 280 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இதன்போது துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சாரப்பில் அணித்தலைவர் தனஞ்சய த சில்வா மற்றும் கமிந்து மென்டிஸ் ஆகியோர் தலா 102 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்களையும் இழந்து 188 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் விஸ்வ பெர்ணான்டோ 4 விக்கெட்களையும், கசுன் ராஜித மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் பெற்றுக் கொண்டனர்.
அதனடிப்படையில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை அணி 92 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது.
தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 418 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இதன்போது துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சாரப்பில் கமிந்து மென்டிஸ் 164 ஓட்டங்களையும் அணித்தலைவர் தனஞ்சய த சில்வா 108 ஓட்டங்களையும் மற்றும் திமுத் கருணாரத்ன 52 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
அதனப்படையில் 511 என்ற வெற்றியிலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்களையும் இழந்து 182 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் கசுன் ராஜித 5 விக்கெட்களையும் விஸ்வ பெர்ணான்டோ 3 விக்கெட்களையும் பெற்றுக் கொண்டனர்.
அதனடிப்படையில் 328 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் 1 – 0 என்ற ரீதியில் முன்னிலை வகிக்கின்றது.