Monday, January 27, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபூஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து கைப்பேசி மீட்பு

பூஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து கைப்பேசி மீட்பு

பூஸ்ஸ உயர்பாதுகாப்பு சிறைச்சாலையில் குமார என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியால் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைப்பேசி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று (24) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்தி நடவடிக்கையுடன் பூஸ்ஸ சிறைச்சாலையின் விசேட பிரிவு ஏ பிரிவில் மேற்கொள்ளப்பட்ட அவசர தேடுதலின் போது இவரின் இடுப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைப்பேசி கண்டுபிடிக்கப்பட்டது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இந்த விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, ​​ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘ரெவுல் குமார’ என்ற கைதியின் இடுப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு கைப்பேசி, சிம் அட்டை, சார்ஜர் மற்றும் மேலதிக பேட்டரி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles