Saturday, January 31, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுற்றச் செயலில் ஈடுபட தயாரான நபர் சிக்கினார்

குற்றச் செயலில் ஈடுபட தயாரான நபர் சிக்கினார்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளுடன் குற்றச் செயல்களில் ஈடுபடத் தயாராக இருந்த நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப்படை கண்டி முகாமின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று (24) மேற்கொண்ட சுற்றவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளை சட்டவிரோதமான முறையில் தம்வசம் வைத்திருந்து குற்றச் செயல்களில் ஈடுபடத் தயாரான தலாத்துஓயா, துல்முரே பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணைகளுக்காக அவர் தலாத்துஓயா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles