Wednesday, January 15, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகால அவகாசத்தை நீடித்த ஜனாதிபதி

கால அவகாசத்தை நீடித்த ஜனாதிபதி

தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை சமர்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பிரியசாத் டெப் தலைமையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி இந்த விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

தேர்தல் விதிமுறைகளை ஆய்வு செய்து, காலத்தின் தேவைக்கேற்ப தேர்தல் சட்டங்களில் திருத்தம் செய்வதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகும் நாள் வரையிலான நேரத்தை குறைத்தல், வாக்களிப்பில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாக்களிக்கும் வாய்ப்பை வழங்குதல், வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு வாக்களிக்க தேவையான ஏற்பாடுகளை செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பரிந்துரைகளை வழங்குமாறு சம்பந்தப்பட்ட குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பான பரிந்துரைகளை ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க வேண்டும் என இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதும் அதனை மேலும் 02 மாதங்களுக்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இது தொடர்பான இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு ஜூன் மாதம் 15 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles