வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த பெண்ணொருவரை விளக்கமறியலில் வைக்க களுத்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜப்பான். கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நாட்டைச் சூழவுள்ள பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்களிடம் அவர் மோசடி செய்ததாக களுத்துறை தெற்கு பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பானில் வசிக்கும் ஒருவர் மூலம் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டதாகவும், பின்னர் அந்த நபர் வேலை வழங்குவதைத் தவிர்த்ததால் தானும் இந்த மோசடியில் சிக்கியதாகவும் அந்த பெண் பொலிஸில் தெரிவித்துள்ளார்.
தெற்கு களுத்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரண்டு முறைப்பாடுகளின் பிரகாரம், இந்த பெண் கைது செய்யப்பட்டு நேற்று (21) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பாணந்துறைஇ பின்வத்தஇ மடுப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரின் தாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெற்கு களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாஇ தோணிக்கல் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (22.03) காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியாஇ தோணிக்கல் ஆலடி வீதியில் உள்ள பலசரக்கு வியாபார நிலையம் ஒன்றில் இருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான இரண்டு பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய ரங்கசாமி நேசரத்தினம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
தனது குடும்பத்தை பிரிந்து தாயாருடன் வசித்து வந்ததுடன், இவ் வியாபார நிலையத்திலேயே தங்கி இருந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.