Sunday, March 15, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீச்சல் தடாகத்தில் மூழ்கி ஒருவர் பலி

நீச்சல் தடாகத்தில் மூழ்கி ஒருவர் பலி

களுத்துறை வடக்கு பொலிஸ் எல்லைக்குட்பட்ட மில்லகஸ்ஹந்திய பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விடுதிக்கு நேற்று (21) பிற்பகல் சென்ற இளைஞர்கள் குழுவிலிருந்த ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 48 வயதுடைய கபுஹேன – பரகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

நீரில் மூழ்கிய நபரை அங்கிருந்தவர்கள் மீட்டு களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், அதன்போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் நீரில் மூழ்கும் காட்சி குறித்த விடுதியில் உள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles