தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று முன்தினம் (20) கனடா சென்றார்.
கனடாவின் இரண்டு முக்கிய நகரங்களான டொரண்டோ மற்றும் வான்கூவரில் நடைபெறவுள்ள இலங்கைப் பொதுக்கூட்டங்களிலும் மேலும் பல சிநேகபூர்வ சந்திப்புக்களிலும் பங்கேற்பதற்காக அனுரகுமார திஸாநாயக்க கனடா புறப்பட்டுச் சென்றார்.
டொரண்டோ விமான நிலையத்தில் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு இலங்கையர்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.