இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக அனுஷ சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஒரு முன்னாள் டெஸ்ட் வீரர் மற்றும் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, விளையாட்டு ஊக்குவிப்பு ஊட்டச்சத்து நிபுணர் பதவிக்கு ஹஷன் அமரதுங்கவும், பிசியோதெரபிஸ்ட் பதவிக்கு ஜொனதன் போர்ட்டரும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.