Sunday, August 24, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதோழியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய ஆசிரியை

தோழியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய ஆசிரியை

ஆசிரியை ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு ஆசிரியை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

46 வயதுடைய ஆசிரியை ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த 44 வயது ஆசிரியை, பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

கழுத்து மற்றும் கால் பகுதிகளில் அவருக்கு வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

இரு ஆசிரியைகளும் வெவ்வேறு பாடசாலைகளில் சேவையாற்றுபவர்கள் என்பதுடன், இருவரும் நண்பர்கள் என கூறப்படுகிறது.

எனினும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடந்த 18 ஆம் திகதி காலை இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles