Sunday, July 13, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதவறான உறவால் பிறந்த குழந்தையை கொன்ற தாய் கைது

தவறான உறவால் பிறந்த குழந்தையை கொன்ற தாய் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு, இளங்கோபுரம் பகுதியில் பெண்ணொருவர் தனது பச்சிளம் குழந்தையை கொலை செய்துள்ளார்.

அவர் கணவனை பிரிந்து வாழும் நிலையில் தவறான உறவின் மூலம் கற்பமடைந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் சிசுவை பெற்றெடுத்த நிலையில் அதனை கொலை செய்துள்ளார்.

அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குறித்த விடயம் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

குறித்த குழந்தையை புதைத்த இடத்தில் நீதிபதி முன்னிலையில் சோதனை நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles