அரபிக்கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களம் உள்நாட்டு மீனவர்களுக்கு அறிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை அரபிக்கடலில் சோமாலிய ஆயுதக் குழுவினால் ஈரானிய மீன்பிடி படகு கடத்தப்பட்டமை தொடர்பில் கவனத்தை ஈர்த்து கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.