Sunday, January 18, 2026
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவீதியில் சென்ற நபர் யானை தாக்கி மரணம்

வீதியில் சென்ற நபர் யானை தாக்கி மரணம்

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வீதியால் சென்றவர் யானை தாக்கி மரணமடைந்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

செட்டிகுளம் -மருதமடுப் பகுதியில் நேற்று (17) மாலை வீதியால் பயணித்த முதியவர் ஒருவரை அப்பகுதிக்கு வந்த யானை தாக்கியுள்ளது.

இதனால் படுகாயமடைந்த குறித்த முதியவர் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

செட்டிகுளம் – மருதமடு பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய தனபாலகே அனுர தென்னக்கோன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles