Saturday, April 19, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுப்ரீம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் IPL போட்டிகள்

சுப்ரீம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் IPL போட்டிகள்

உலகின் பிரசித்தி பெற்ற கிரிக்கெட் தொடரான இந்தியன் ப்ரீமியர் லீக்கின் இலங்கைக்கான அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு உரிமையை சுப்ரீம் தொலைக்காட்சி அலைவரிசை பெற்றுள்ளது.

அதன்படி தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தியன் பிரீமியர் லீக்கின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு உரிமையை சுப்ரீம் தொலைக்காட்சி அலைவரிசை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் சபை நடத்தும் ஐபிஎல் போட்டி இந்த ஆண்டு 17வது முறையாக நடைபெறுகிறது.

இந்த ஆண்டுக்கான போட்டிகள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், தொடக்க ஆட்டம் கடந்த சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு போட்டியின் நேரடி ஒளிபரப்பைத் தவிர, சுப்ரீம் தொலைக்காட்சி அலைவரிசை, நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதற்காக சிறப்பு செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை சுப்ரீம் டிவி ஊடாக நாடு முழுவதிலும் உள்ள UHF 47, Dialog TV அலைவரிசை எண் 20, PEO TV அலைவரிசை எண் 16 மற்றும் Freesat அலைவரிசை எண் 07 ஆகியவற்றில் பார்க்க முடியும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles