Thursday, May 1, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டு7 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சிறுவர்கள் கைது

7 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சிறுவர்கள் கைது

மட்டக்களப்பு – வாகரையில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேரில் இருந்த 4 சிறுவர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுளனர்.

18 வயதுயை மற்றைய சந்தேக நபரை எதிர்வரும் 27 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (13) உத்தரவிட்டார்.

குறித்த சிறுமியின் தந்தை உயிரிழந்துள்ளதுடன், தாயார் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த 7 வயது சிறுமியுடன் அந்தபகுதியைச் சேர்ந்த 11 சிறுவனுடன் விளையாடியுள்ளார். இதன்போது விளையாட்டில் தோல்வியடைந்த சிறுமிக்கு தண்டனையாக சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளான்.

இதனை தொடர்ந்து குறித்த சிறுவன் ஏனைய 14,15,18 வயதுடைய நண்பர்களுக்கும் இந்த சூட்சமத்தை தெரிவித்துள்ளதையடுத்து குறித்த சிறுமியுடன் தனிதனியாக சிறுவர்கள் சென்று விளையாட்டு என்ற பேர்வையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதனை அவதானித்த அந்தபகுதி இளைஞன் ஒருவர் சிறுமியின் தாயாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பொலிஸாரிடம் முறையிட்டதையடுத்து 11 வயதுடைய ஒருவரையும், 14 வயதுடைய இருவரையும் 15 வயதுடைய ஒருவரையும் 18 வயதுடைய ஒருவர் உட்பட 5 பேரை நேற்று (13) கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 15 வயதுக்கு உட்பட் 4 சிறுவர்களையும் சட்ட வைத்தியரிடம் சேதனைக்கு உட்படுத்துமாறும் அடுத்த வழக்கிற்கு ஆஜராகுமாறும் பிணையில் விடுவித்ததுடன் 18 வயதுடையவரை எதிர்வரும் 27 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles