Sunday, January 18, 2026
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவீதியை கடக்க முயன்ற பெண் பேருந்து மோதி பலி

வீதியை கடக்க முயன்ற பெண் பேருந்து மோதி பலி

வென்னப்புவ நகரில் வீதியைக் கடக்கச் முயன்ற பெண்ணொருவர், பேருந்து மோதி நேற்று (13) உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லுனுவில – ஜயா மாவத்தையைச் சேர்ந்த பெடில்லே பொடி மெனிக்கே எனும் 69 வயதுடைய பெண்ணொருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

பாதசாரிகள் குழுவொன்று வீதியைக் கடக்கும்போது, நீர்கொழும்பு பகுதியில் இருந்து சிலாபம் நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டு மீண்டும் முன்னோக்கிச் செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போதுஇ முன்பக்கமாக வீதியைக் கடக்க முற்பட்ட குறித்த பெண் மீது பேருந்து மோதியுள்ளதுடன், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் வென்னப்புவ போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles