Friday, March 14, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனது பிள்ளைகளுக்கு எமனான தந்தை - அம்பாறையை உலுக்கிய சம்பவம்

தனது பிள்ளைகளுக்கு எமனான தந்தை – அம்பாறையை உலுக்கிய சம்பவம்

அம்பாறை – பெரிய நீலாவணை – பாக்கியதுல் சாலியா வீதியில் இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்று தந்தையொருவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார்.

இன்று (14) காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இரத்த வெள்ளத்திலிருந்த நிலையில் இரு பிள்ளைகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரின் மகனான முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ்(29) என்பவரும், மகளான முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா(15) என்பவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர்களின் தாய் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்திருந்ததாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தனது மனவளர்ச்சி குன்றிய இரு பிள்ளைகளை கொன்று தற்கொலையில் ஈடுபட்ட தந்தையும் காயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் 63 வயதான முஹம்மது மிர்சா முகமது கலீல் என்ற நபரே காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளர்.

சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles