Friday, March 14, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉணவு விஷமானதில் 9 மாணவர்கள் வைத்தியசாலையில்

உணவு விஷமானதில் 9 மாணவர்கள் வைத்தியசாலையில்

நமுனுகுல – கனவரெல்ல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் உணவு விஷமானதில் 9 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் இன்று காலை திடீரென சுகவீனமடைந்த நிலையில், பசறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இரண்டு முதல் ஐந்தாம் தரங்களுக்கு இடைப்பட்ட வகுப்புகளில் கற்கும் மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்

அத்துடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 3 மாணவிகளும் 6 மாணவர்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவு விஷமானமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles