Saturday, March 14, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிடுதி அறையிலிருந்து இருவர் சடலங்களாக மீட்பு

விடுதி அறையிலிருந்து இருவர் சடலங்களாக மீட்பு

விருந்தினர் விடுதியொன்றில் பெண் ஒருவரைகூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற நபர் அறைக்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

பொத்துவில் – அருகம்பே பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்தே குறித்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பெண்ணை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த நபர், பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த இருவரும் தங்கியிருந்த ஹோட்டல் அறை நீண்ட நேரம் திறக்கப்படாததை அடுத்து, ஹோட்டல் நிர்வாகம், பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, பொலிஸாரின் உதவியுடன் அறை திறக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், வெட்டு காயங்களுடன் பெண்ணின் சடலம் காணப்பட்டுள்ளது.

அறையின் குளியலறையில் குறித்த ஆணின் சடலம், தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருமணத்துக்கு அப்பாலான உறவை இருவர் பேணியுள்ளதுடன், மஹகலுகொல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதான பெண் மற்றும் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 52 வயதான ஆண் ஆகியோரே இவ்வாறு சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles