ஹம்பேகமுவ பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையின் கீழ் மொனராகலை பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளினால் தனமல்வில – ஹம்பேகமுவ பிரதேசத்தில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சுற்றிவளைப்பின் போது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணொருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 380 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அவர் சில காலமாக அப்பகுதி மக்களுக்கு இந்த போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஹம்பேகமுவ பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பெண் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மொனராகலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.