Wednesday, November 26, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபரசிட்டமோல் தொண்டையில் சிக்கி 4 வயது சிறுமி பலி

பரசிட்டமோல் தொண்டையில் சிக்கி 4 வயது சிறுமி பலி

காய்ச்சல் காரணமாக உட்கொண்ட பரசிட்டமோல் மாத்திரை தொண்டையில் சிக்கி 4 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

மருந்தை உட்கொண்ட பின்னர் மயக்கமடைந்த சிறுமி, மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

ஓஷதி சாவிந்தயா ராஜபக்ஷ என்ற 4 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தாய் வெளிநாட்டில் பணியாற்றுவதால், அவர் தனது தாத்தா, பாட்டி அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார்.

குறித்த சிறுமியின் தந்தை அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள வேறொரு வீட்டில் வசிப்பதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பரசிட்டமோல் மாத்திரை தொண்டையில் சிக்கியதால் மயக்கமடைந்த நிலையில் மஹியங்கனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.Share:

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles