Friday, January 17, 2025
28.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுமியை வன்புணர்ந்த நபருக்கு 10 வருட கடூழிய சிறை

சிறுமியை வன்புணர்ந்த நபருக்கு 10 வருட கடூழிய சிறை

நானுஓயா பொலிஸ் பிரதேசத்தில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய இன்று (13) வழங்கி தீர்ப்பளித்தார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நானு ஓயா பிரதேசத்தை சேர்ந்த ஃபாருக் மொஹொமட் சாலித் என்ற 52 வயதுடைய நபர், அதே பிரதேசத்தை சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் இது தொடர்பாக பாடசாலை ஊடாக சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து குறித்த நபர் மீது நானு ஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து தற்போது குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு எதிராக நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை செய்யப்பட்ட நிலையில் வழக்கிற்கான தீர்ப்பு இன்று (13) வழங்கப்பட்டது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 இலட்சம் ரூபா நஷ்டஈடாக வழங்க வேண்டுமென தீர்ப்பு வழங்கிய நீதிபதி இந்த தொகையை பாதிக்கப்பட்டவருக்கு வழங்காத பட்சத்தில் மேலும் மூன்று வருடங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டார்.

அத்துடன் குற்றவாளி நீதிமன்ற தண்டனை பணமாக 15 ஆயிரம் ரூபா செலுத்த உத்தரவிட்ட நீதிபதி இந்த தண்டனை பணத்தை செலுத்தாத பட்சத்தில் மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles