Tuesday, July 29, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎல்பிட்டிய சிறுமி கொலை: பிரதான சந்தேக நபர் கைது

எல்பிட்டிய சிறுமி கொலை: பிரதான சந்தேக நபர் கைது

எல்பிட்டிய சிறுமி கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுமியின் மைத்துனரான சுதேஷ் பிரியங்கர என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் குற்றத்தைச் செய்துவிட்டு தப்பியோடிய அவர் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 9ஆம் திகதி கரந்தெனிய தல்கஹாவத்தை பகுதியைச் சேர்ந்த ஹன்சிகா நதிஷானி என்ற 17 வயதுடைய சிறுமி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த கொலையில் அவரது மூத்த சகோதரியின் கணவர் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

கைது செய்யப்பட்ட நபருக்கும் கொலை செய்யப்பட்ட சிறுமிக்கும் தொடர்பு இருந்ததாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​சிறுமி வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்தமையினால் அவரை கொலை செய்தததாக தெரிவித்துள்ளார்.

முச்சக்கரவண்டியில் சென்ற குறித்த நபர் குறித்த சிறுமியை கடத்திச் சென்று கொலை செய்ததுடன், கடந்த 9ஆம் திகதி எல்பிட்டிய தலாவ பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles