Thursday, October 9, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதாமரை கோபுரத்தில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்ட இருவர் உயிரிழப்பு

தாமரை கோபுரத்தில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்ட இருவர் உயிரிழப்பு

கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்தில் கலந்து கொண்ட யுவதி ஒருவரும் இளைஞனும் உயிரிழந்துள்ளனர்.

இருவரும் போதைப்பொருள் உட்கொண்ட போது திடீரென சுகவீனமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அழகியல் நிலைய முகாமையாளராக கடமையாற்றிய 27 வயதுடைய பெண்ணும், தெஹிவளையை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த யுவதி உட்பட 7 பேர் போதைப்பொருளை உட்கொண்டதாக அவரது காதலன் என கூறிக்கொள்ளும் இளைஞன் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இருவரின் பிரேதப் பரிசோதனைகள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles