இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று (11) கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுடன், எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.