கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (11) ஆஜர்படுத்தப்பட்ட ‘ஹரக் கட்டா’ எனப்படும் நந்துன் சிந்தக, தங்காலை பழைய சிறைச்சாலையில் அமைந்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு பணியகத்தின் கீழ் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் ஹரக் கட்டா இன்று (11) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சந்தேக நபரின் கைரேகைகள் எடுக்கப்பட்டு அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பின்னர், வழக்கை ஏப்ரல் 26-ம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டார்.