யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 109.56 ஏக்கர் காணி நேற்று (10) பொதுமக்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதியின் பணிமனைகளின் பிரதானி மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
யாழ்.மாவட்டத்திலும் கிளிநொச்சி மாவட்டத்திலும் பாதுகாப்பு தரப்பினரிடம் கையளிக்கப்பட்டுள்ள ஏனைய காணிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பலாலி மற்றும் வசாவிளான் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் சுமார் 3000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.