தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் கொலை செய்த கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எலபாத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிரியெல்ல பிரதேசத்தில் நேற்று (10) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருவருக்கும் இடையில் சில காலமாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக இருவரும் தனித்தனி வீடுகளில் வசித்து வருவதாகவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பெண் நேற்று (10) காலை தனது பிள்ளைகளுக்கான புத்தகங்களை எடுத்து வருவதற்காக தனது கணவரின் வீட்டிற்குச் சென்ற போதே இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.
நிரியெல்ல பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபரான 43 வயதுடைய கணவர் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எலபாத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.