Monday, August 25, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிக்கு ஒருவர் சுட்டுக்கொலை: பிரதான சந்தேக நபர் கைது

பிக்கு ஒருவர் சுட்டுக்கொலை: பிரதான சந்தேக நபர் கைது

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தனமல்வில, ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அரலகங்வில, கஸ்யப புர பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹம்பேகமுவ பொலிஸ் நிலையப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் குறித்த பிரதேசத்தில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பேலியகொட விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles