Saturday, April 19, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற பெண் மரணம்

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற பெண் மரணம்

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு தரிசனம் செய்து திரும்புகையில் சீத்த கங்குல பகுதியில் வைத்து திடீர் சுகவீனம் ஏற்பட்டதன் காரணமாக அவர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

80 வயதான குறித்த பெண் வத்தளை பகுதியில் இருந்து தனது குடும்பத்துடன் சிவனொளபாதமலைக்கு யாத்திரை செய்ய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ள்துடன், பிரேத பரிசோதனை பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

சம்பவம் தொடர்பில் நல்லதண்ணி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles