Monday, June 29, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகைதான இந்திய மீனவர்கள் 22 பேருக்கு விளக்கமறியல்

கைதான இந்திய மீனவர்கள் 22 பேருக்கு விளக்கமறியல்

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் (09) 22 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

மீனவர்களின் 3 படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டன.

பின்னர் 22 மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles