Friday, January 17, 2025
24.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமலையில் இருந்து தவறி விழுந்த பல்கலைக்கழக மாணவன்

மலையில் இருந்து தவறி விழுந்த பல்கலைக்கழக மாணவன்

ரம்புக்கனை – எலகல்ல மலையில் இருந்து தவறி விழுந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சிகிச்சைக்காக மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடமேல் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் கல்முனை பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய பல்கலைக்கழக மாணவனே விபத்தில் சிக்கியுள்ளார்.

இன்று காலை மற்றுமொரு மாணவர் குழுவுடன் எலகல்ல மலையில் ஏறச் சென்ற வேளையிலேயே குறித்த மாணவன் தவறி விழுந்துள்ளார்.

கீழே விழுந்த மாணவனை மீட்க பெரகல இராணுவ முகாமின் அதிகாரிகள் குழு பெரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

காயமடைந்த பல்கலைக்கழக மாணவனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles