Monday, May 5, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎல்பிட்டிய கொலை சம்பவம் - முச்சக்கரவண்டி சாரதி கைது

எல்பிட்டிய கொலை சம்பவம் – முச்சக்கரவண்டி சாரதி கைது

எல்பிட்டிய பிரதேசத்தில் யுவதியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு முன்னர் கடத்தப்பட்டதாக கூறப்படும் முச்சக்கரவண்டி மற்றும் அதன் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சந்தேகநபரான முச்சக்கரவண்டி சாரதி கரந்தெனிய பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தான் வாடகை அடிப்படையில் சென்றதாகவும், பின்னர் குறித்த நபரையும் யுவதியையும் நாணயக்கார மாவத்தைக்கு அருகில் இறக்கிவிட்டதாகவும் சந்தேகத்திற்குரிய முச்சக்கரவண்டி சாரதி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சந்தேக நபரான முச்சக்கரவண்டி சாரதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரந்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேயிலைத் தோட்டத்தில் வெட்டுக் காயங்களுடன் 17 வயதுடைய யுவதியின் சடலம் அண்மையில் மீட்கப்பட்டிருந்தது.

எனினும், கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படும் சிறுமியின் மைத்துனர் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles