மன்னார் மாவட்டத்தின் அடம்பன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாயத்து வெளி பகுதியில் திருக்கேதீஸ்வரம் ஆலய வழிபாட்டுக்கு சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாகியுள்ளது.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.