Monday, March 16, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாமனாரை கொலை செய்த மருமகன்

மாமனாரை கொலை செய்த மருமகன்

சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மயில்குளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மாமனாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

நேற்றிரவு (08) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிலாபம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், குறித்த நபர் 81 வயதான தனது மாமனாரை இவ்வாறு படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலை செய்த நபர் சம்பவத்துக்கு பின்னர் மருந்து மாத்திரையை உட்கொண்டதாகவும், அங்கிருந்தவர்களால் அவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles