பேலியகொடை மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலையில் இன்று (09) சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதன்படி ஒரு கிலோகிராம் முள்ளங்கி 50 ரூபாவாகவும் , ஒரு கிலோகிராம் வெங்காயத்தாள் 100 ரூபாவாகவும், கிலோகிராம் கரட் 200 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பூசணிக்காய் 250 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.
அத்துடன் ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் 120 ரூபாவாகவும் , ஒரு கிலோகிராம் முட்டைக்கோவா 150 ரூபாவாகவும் , ஒரு கிலோகிராம் பீட்ரூட் 220 ரூபாவாகவும் , ஒரு கிலோகிராம் போஞ்சி 280 ரூபாவாகவும் காணப்படுகின்றது.
மேலும் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 300 ரூபாவாகவும் , ஒரு கிலோகிராம் கறி மிளகாய் 400 ரூபாவாகவும் , ஒரு கிலோகிராம் தேசிக்காய் 150 ரூபாவாகவும் , ஒரு கிலோகிராம் இஞ்சி 1,800 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் தக்காளி 250 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.